மியான்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 1,000 ஆக உயர்வடைந்துள்ளது.
மியான்மர் நாட்டின் 2வது பெரிய நகரான மண்டாலே நகரருகே நேற்று மதியம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்திற்கு பின்பும் தொடர்ந்து நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டன.
இதனால் கட்டிடங்கள் பல அடியோடு சரிந்தன. வரலாற்று சிறப்பு மிக்க துறவிகளுக்கான மடாலயம் கூட இதனால் பாதிக்கப்பட்டது. 2 பாலங்கள் இடிந்து விழுந்தன. 5 நகரங்கள் கட்டிட இடிபாடுகளை சந்தித்துள்ளன. மியான்மரில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்திற்கு 1,000 பேர் பலியாகி உள்ளனர். 2,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.
பாங்காக்கில் 1.7 கோடிக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அவர்களில் பலர் உயரடுக்குகளை கொண்ட கட்டிடங்களில் குடியிருந்து வருகின்றனர். 3 கட்டிடங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்ததில், 101 பேர் காணாமல் போயுள்ளனர். இதனை தொடர்ந்து, மியான்மர் மற்றும் தாய்லாந்து நாடுகளில், மீட்பு மற்றும் நிவாரண பணிகள் இன்று காலை முதல் மீண்டும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது.