சீனாவில் 18 வயதான யாங் என்ற இளம்பெண், தனிப்பட்ட செலவுகளை குறைக்கும் நோக்கத்தில் ஒரு சாதாரண கழிப்பறையை தற்காலிக வீடாக மாற்றி வாழ்ந்து வருகிறார். மரச்சாமான்கள் கடையில் வேலை பார்க்கும் யாங், கடையின் கழிப்பறையை வாழும் இடமாக மாற்றி, தனது முதலாளிக்கு மாதம் வெறும் £5 (சுமார் ₹545) மட்டுமே வாடகையாக கொடுக்கிறார்.
யாங், தனது அலுகலகத்தில் கொடுத்த அறையில் கதவில்லாததால் அதில் தங்க வேண்டாம் என தீர்மானித்துள்ளார். இதனால் யாங் கழிப்பறைக்குள் சமையல் அடுப்பை வைத்து சமைப்பதோடு, துணிகளை கழிப்பறையிலேயே துவைத்து கட்டிடத்தின் மேல்தளத்தில் உலர்த்துகிறார்.
தனது தினசரி வாழ்வை Douyin-வில்(டிக்டாக் போன்ற செயலி) பகிரும் யாங்கை தற்போது 16,000பேர் பின்தொடர்கின்றனர். அதிகமான செலவில்லாமல் வாழும் இவர், தனது வருமானத்தின் பெரும்பகுதியை சேமித்து, எதிர்காலத்தில் ஒரு வீடு அல்லது கார் வாங்க வேண்டும் என்ற கனவுடன் தொடர்ந்து தன் வழியில் பயணிக்கிறார்.