இலங்கை நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் ஜனாதிபதி அனுரா குமார திசநாயகே பேசுகையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 5-ந்தேதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.
கடந்த ஆண்டு டிரம்பர் மாதம் இலங்கை ஜனாதிபதி டெல்லிக்கு வருகை தந்திருந்தார். அப்போது இரு நாடுகளிடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்காக தற்போது பிரதமர் மோடி இலங்கைக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்திய பிரதமர் வருகையின்போது, இலங்கை திருகோணமலையில் உள்ள சம்பூர் மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி திசாநாயகே தெரிவித்துள்ளார். அதோடு பிரதமர் மோடி இலங்கைக்கு வருகை தருவது நாட்டின் ஸ்திரத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் இருப்பதாக ஜனாதிபதி திசாநாயகே கூறியுள்ளார்.