கொடிக்கம்பத்தை அகற்றும் போது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்ததும், நான்கு பேர் படுகாயமடைந்ததும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை அடுத்த மூன்றம்பட்டி பகுதியில், பொது இடத்தில் இருந்த கொடிக்கம்பத்தை அகற்றும் பணியில் ஐந்து பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கொடிக்கம்பம் மின்சார வயரில் உரசியுள்ளது
இதனால் ஐந்து பேர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்டு, சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதில் ராமமூர்த்தி என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 4 பேருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.