தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்றால் மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பெண்களுக்கு மாதந்தோறும் 15ஆம் தேதி மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் பயன்பெறும் நிலையில் புதிதாக விண்ணப்பித்தவர்களும் இணைக்கப்படுவார்கள் என்று திமுக அரசு உறுதி கொடுத்தது.
அதன்படி இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க சில தளர்வுகள் வழங்கப்பட்ட நிலையில் புதிதாக ரேஷன் கார்டு பெறுபவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இன்று சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் புதிதாக விண்ணப்பிக்க விரைவில் வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறினார். அதன் பிறகு இட ஒதுக்கீடால் 104 விளையாட்டு வீரர்களுக்கு இதுவரை பணி வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.