தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் நாளை முதல் சுங்க கட்டணம் உயரும் என்று தற்போது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை முதல் திருந்திய சுங்க கட்டணம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
அதன்படி தாம்பரம்-மதுரவாயல் நெடுஞ்சாலையில் உள்ள வானகரம் சுங்கச்சாவடி, தாம்பரம் புழல் நெடுஞ்சாலையில் உள்ள சூரப்பட்டு சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட இருக்கிறது.மொத்தம் 46 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட இருக்கும் கார்களுக்கு 5 ரூபாய் வரையிலும், பிற வாகனங்களுக்கு 15 முதல் 30 ரூபாய் வரையிலும் கட்டணம் உயர்த்தப்பட இருக்கிறது. மேலும் இந்த புதிய கட்டண உயர்வு 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.