அதிர்ச்சி வீடியோ... பிரபல குத்துச்சண்டை வீரர் களத்திலேயே மயங்கி சரிந்து பலி!
Dinamaalai April 02, 2025 03:48 AM

நைஜீரியாவில் வசித்து வரும் குத்துச்சண்டை வீரர் கேப்ரியல் லுவாஸ்கன். 40 வயதாகும் இவர் நைஜீரியா மற்றும் மேற்கு ஆப்பிரிக்க லைட்-ஹெவிவெயிட் முன்னாள் சாம்பியன் ஆவார். இந்நிலையில், கானா நாட்டில் தலைநகர் அக்ரா நகரில் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. 

இந்த குத்துச்சண்டை போட்டியில் கேப்ரியல் கானாவை சேர்ந்த ஜான் பனுகுவை எதிர்கொண்டு ஆடினார். ஆட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் போது 3வது சுற்றில் களத்திற்கு வந்த கேப்ரியல் திடீரென களத்திலேயே மயங்கி விழுந்தார். 

உடனடியாக அவரை மீட்ட அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் கேப்ரியலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். கேப்ரியல் குத்துச்சண்டை களத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து விளையாட்டு துறை சார்ந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.