கோவையில் இருந்து அரசு விரைவு பேருந்து சேலம் நோக்கி புறப்பட்டு சென்றது. இது நடத்துனர் இல்லாத பேருந்து சேவை. இதனால் பயண சீட்டு வழங்கிய பிறகு இறுதி பயண நடை என்பதால் நடத்துநர் ஓட்டுநரிடம் பணத்தை கொடுத்துவிட்டு கணியூர் டோல்கேட்டில் இறங்கிவிட்டார். பேருந்து இயக்குவதற்கு முன்பு ஓட்டுநர் அந்த பணத்தை எண்ண வேண்டும்.
ஆனால் அவர் இரண்டு கைகளிலும் பணத்தை வைத்துக் கொண்டு ஸ்டீரிங்கில் முழங்கையை வைத்தபடி பணத்தை எண்ணிக்கொண்டே பெருந்தை ஓட்டி சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆனது.
அந்த வீடியோவை பார்த்த பலரும் பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் ஆபத்தான முறையில் ஓட்டுனர் பேருந்து இயக்கி சென்றுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.