Naga Chaitanya- Sobhita: இரண்டாம் கல்யாணம் செய்துக்கொண்டு இருக்கும் சைதன்யா மற்றும் சோபிதா இருவரும் தற்போது பேட்டி அளித்திருக்கும் நிலையில் சில அதிர்ச்சி தகவல் வைரலாகி வருகிறது.
தமிழின் பிரபல நடிகையான சமந்தா மற்றும் தெலுங்கு நடிகரான நாக சைதன்யா இருவரும் காதலித்து இருமத முறைப்படி திருமணம் செய்துக்கொண்டனர். ரசிகர்கள் இந்த தம்பதியை கொண்டாடி தீர்த்தனர்.
நான்கு வருட திருமண வாழ்க்கையை திடீரென முறித்து கொள்வதாக சமந்தா தரப்பு திடீரென அறிவித்தது. இது ரசிகர்களுக்கு பெரிய அளவில் அதிர்ச்சியை கொடுத்த நிலையில் இந்த திடீர் முடிவுக்கு காரணம் நாக சைதன்யாவின் திருமணம் மீறிய உறவு தான் என்றும் கூறப்படுகிறது.
விவாகரத்துக்கு பின்னர் அடிக்கடி சோபிதாவுடன் நாக சைதன்யா பல இடங்களில் சிக்கி அந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வந்தது. இந்நிலையில் கடந்தாண்டு நாக சைதன்யா மற்றும் சோபிதாவின் இரண்டாம் திருமணம் குறித்த நிச்சய விழா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து எளிய முறையில் இருவரும் கடந்தாண்டு இறுதியில் திருமணம் செய்துக்கொண்டனர். இவர்கள் திருமணத்தினை ரசிகர்கள் பலரும் எதிர்த்து வந்தனர். அடிக்கடி சோபிதாவை திட்டியும் தீர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் சோபிதா மற்றும் நாக சைதன்யா இருவரும் ஜோடியாக முதல் பேட்டியை கொடுத்து இருக்கின்றனர். அதில் யார் முதலில் காதலை சொன்னது எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு சோபிதா, நாக சைதன்யாவை கை காட்டுவார். இருந்தும் நாக சைதன்யா அதை பெருமையாக அமோதித்து கொள்வார்.
இதை பார்த்த ரசிகர்கள் திருமணமான ஆணுடன் பழகியதை இப்படி பெருமையாக சொல்லிக்கலாமா எனவும் விமர்சித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் சோபிதா கைக்காட்டும் போது நாக சைதன்யா கொஞ்சம் ஜர்க்கானதையும் சிலர் நோட் செய்து பேச இதில் எதுதான் உண்மை என பலரும் இந்த ஜோடியை மீண்டும் கலாய்க்க தொடங்கி உள்ளனர்.