இனி ATM இல் பணம் எடுத்தால் 23 ரூபாய் கட்டணம் செலுத்தணும்.. குண்டை தூக்கிப்போட்ட RBI!
ET Tamil March 29, 2025 01:48 AM
மே 1, 2025 முதல் ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் கட்டணங்கள் உயரும். ஏனெனில் இந்திய ரிசர்வ் வங்கி ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதற்கான கட்டணத்தை 3 ரூபாயிலிருந்து 23 ரூபாயாக உயர்த்த வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய ஏடிஎம் இலவச வரம்புகள் முடிந்த பிறகு ஒவ்வொரு ஏடிஎம் பரிவர்த்தணைகளுக்கும் 23 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.அதாவது நீங்கள் ஒரு மாதத்தில் ஐந்துமுறை ஏடிஎம் இருந்து பணத்தை இலவசமாக எடுக்கலாம். அதற்குபின் நீங்கள் ஏடிஎம் இருந்து பணம் எடுத்தால் மே மாதம் முதல் 23 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.மறுபுறம், நீங்கள் வேறொரு வங்கியின் ஏடிஎம்மைப் பயன்படுத்தினால், மெட்ரோ நகரங்களில் ஒரு மாதத்தில் அதிகபட்சம் 3 இலவச பரிவர்த்தனைகளையும், மெட்ரோ அல்லாத நகரங்களில் அதிகபட்சம் 5 இலவச பணம் எடுக்கலாம். இலவச பரிவர்த்தனைகளின் வரம்பைத் தாண்டிய பிறகு, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் நீங்கள் ரூ.23 கட்டணம் செலுத்த வேண்டும். தற்போது, இலவச பரிவர்த்தனை வரம்பு தீர்ந்த பிறகு, வங்கி தனது வாடிக்கையாளர்களிடம் ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.21 வசூலிக்க முடியும். ஒரு மாதத்தில் பல முறை ஏடிஎம்மில் பணம் எடுக்கும் அல்லது வேறு எந்த சேவையையும் பயன்படுத்தும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு இந்த முடிவு சற்று அப்செட்டான ஒன்றாகத் தான் இருக்கும்.இந்த ஏடிஎம் கட்டண உயர்விற்குபின் பல முக்கிய காரணங்கள் உள்ளன. ஏனெனில் வங்கிகள் ஏடிஎம் பயன்பாட்டிற்கு செலவுகளை செய்கின்றன. நீங்கள் வேறொரு வங்கியின் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கும்போது, பயன்படுத்தப்பட்ட சேவைக்கு உங்கள் வங்கி மற்ற வங்கிக்கு பணம் செலுத்துகிறது. நீங்கள் ஒரு SBI வாடிக்கையாளராக இருந்து, PNB ATM-ல் இருந்து பணம் எடுத்தீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அத்தகைய சூழ்நிலையில், எஸ்பிஐ அதன் சேவைக்காக பிஎன்பிக்கு பணம் செலுத்தும். வரம்பு இலவசம் ஆன பிறகு, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் எஸ்பிஐ கட்டணம் வசூலிக்கும். இது ஏடிஎம் பரிமாற்ற கட்டணம் என்று அழைக்கப்படுகிறது.
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.