18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின.
டாஸ் என்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா அணியின் துவக்க ஆட்டக்காரர் டீ காக்கை தனது முதல் ஒரே ஓவரிலே ஆட்டமிழக்க செய்தார் ஹாசில்வுட். இதன் பிறகு சுனில் நரைன் மற்றும் கேப்டன் அஜின்கியா ரகானே ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினார்.103 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை ஒரு வழியாக ரசிக் சலாம் பிரித்தார். நரைன் 44 ரன்களில் வெளியேற , சிறப்பாக ஆடி 56 ரன்கள் சேர்த்த ரகானேவை ஆட்டமிழக்க செய்தார் க்ருணல் பாண்டியா. அதன் பிறகு அந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
20 ஓவரில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களை மட்டுமே எடுத்தது. பெங்களூர் அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய க்ருணல் பாண்டியா மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
175 என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது. சால்ட் மற்றும் கோலி அதிரடியாக ஆடி பவர் பிளவில் 80 ரன்களை சேர்த்தனர். அதிரடியாக ஆடிய சால்ட் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் படிதர் அதிரடியாக 34 ரன்கள் சேர்த்தார். மற்றொரு துவக்க ஆட்டக்காரர் கோலி ஆட்டமிழக்காமல் 59 ரன்கள் எடுத்தார்.16.2 ஓவரில் பெங்களூரு அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெற்றி அடைந்த பெங்களூர் அணி தனது அடுத்த போட்டியில் சென்னை அணியை வரும் 28ஆம் தேதி எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.