மும்மொழிக் கொள்கையில் பிற மொழிகள் என்ன? நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. கேள்வி
A1TamilNews March 25, 2025 04:48 AM

பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை  அமல்படுத்தியுள்ள மாநிலங்களில் மாணவர்கள் கற்கும் மற்ற மொழிகள் என்னென்ன என்று நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.

மும்மொழிக் கொள்கை என்ற திட்டத்தின் கீழ் இந்தி மொழியை திணிப்பதே ஒன்றிய அரசின் திட்டம் என திமுக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் பாஜக தலைவர் எச்.ராஜா பள்ளி மாணவர்களிடம் இந்தி படிக்கனுமா வேண்டாமா என்ற கேள்வியை நேரடியாக முன் வைத்தார்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் திமுக துணை பொதுச் செயலாளர் மற்றும் திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி எம்.பி. கேள்வி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மும்மொழிக் கொள்கையின் கீழ் கற்பிக்கப்படும் மொழிகளின் விவரங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் தாய்மொழி தவிர மற்ற மொழிகளைப் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை விவரங்கள், இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி அல்லாத இந்திய மொழிகளைப் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை விவரங்கள், தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயாக்களில் (கே.வி) தற்போது பணிபுரியும் தமிழ், இந்தி மற்றும் சமஸ்கிருத ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரங்கள் முதலியவற்றை வெளியிட வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் கோரியுள்ளார்.

அதேபோல் மாணவர்களுக்கு அவரவர் தாய்மொழிகளில் கற்பிக்க கேந்திர வித்யாலயா பள்ளிகள் கொள்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கனிமொழி எம்.பி. கோரிக்கையும் வைத்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.