விஜய் வீதிக்கு வந்து மக்கள் பிரச்சனையை பாக்கட்டும் - அமைச்சர் கீதா ஜீவன்.!!
Seithipunal Tamil March 29, 2025 08:48 AM

விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் உறுதிமொழியுடன் தொடங்கியது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் 17 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து தலைவர் விஜய் பேசியதாவது:-

"அடுத்தாண்டு மக்கள் இதுவரை சந்திக்காத தேர்தலை சந்திப்பார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் இரண்டே கட்சிகள் இடையே மட்டும் தான் போட்டி. ஒன்று தவெக மற்றொன்று திமுக. நம்பிக்கையாக இருங்கள் நல்லதே நடக்கும் மீண்டும் சந்திக்கிறேன்" என்றார்.

இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் குறித்து அமைச்சர் கீதா ஜீவன் விமர்சனம் செய்துள்ளார். அதாவது" சினிமாவில் இருந்து இப்போதுதான் அரசியலுக்கு வந்திருக்கிறார். வீதிக்கு வந்து மக்கள் பிரச்னையை பார்க்கட்டும், அதன் பிறகு அவர் குறித்து பதில் அளிக்கிறேன்" என்றார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.