பெரும் சோகம்….! விடுதி உரிமையாளர் மனைவியுடன் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!
SeithiSolai Tamil March 31, 2025 06:48 PM

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்தவர் கார்த்திக்(33). இவரது மனைவி வினோபா(32). இவர்கள் மாக்கினாம்பட்டியில் உணவு விடுதி நடத்தி வந்தனர். இவர்களது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கார்த்திக்கும் வினோபாவும் திடீரென தற்கொலை செய்து கொண்டனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கார்த்திக் மற்றும் வினோபாவின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.