உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்வில் கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். கும்பமேளா மூலம் மக்களிடையே பிரபலமானவர் மோனாலிசா. சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த மோனாலிசா கும்பமேளாவில் பங்கேற்ற பிறகு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் மோனாலிசாவுக்கு பட வாய்ப்பு கொடுத்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் பலாத்கார வழக்கில் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் மனோஜ் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வீடியோக்களை வைத்து மிரட்டியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சனோஜ் மிஸ்ராவின் இயக்கத்தில் மோனாலிசா தி டைரி ஆஃப் மணிப்பூர் என்ற படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.