வெற்றி மாறனின் சர்ச்சைகளை சந்தித்த "பேட் கேர்ள்" முதல் பாடல் வெளியிடப்படவுள்ளது..!
Seithipunal Tamil March 29, 2025 08:48 AM

இயக்குனர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'பேட் கேர்ள்'. இந்த படத்தின் டீசர் வெளியாகி சர்ச்சையை உஏற்படுத்தியது.

இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங் பொம்மிரெட்டிபல்லி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். ஒரு டீனேஜ் பெண் வளர்ந்து வரும் சூழலில் அவளுக்கு ஏற்படும் ஆசைகள், கனவுகள், இச்சைகள் அவள் எப்படி இந்த உலகத்தை பார்க்கிறாள், அனுபவிக்கிறாள் என்பதை பற்றி இப்படம் பேசியுள்ளது.

சர்ச்சைகளை சந்தித்து வரும் இந்த படம் கோவாவில் நடைபெற்ற 54-ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருது வென்றது. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான 'ப்ளீஸ் என்ன அப்படி பாக்காதே' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை கேபர் வாசுகி வரிகளில் மாளவிகா மனோஜ் பாடியுள்ளார். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.