சின்ன பட்ஜெட்டிலும் நல்ல கதையை ரசிகர்களுக்குத் திரைப்படமாகக் கொடுக்க முடியும் என்று நிரூபித்துள்ளது டிராகன். என்னா மாதிரி படத்தை எடுத்துருக்காங்கன்னு தான் பார்த்த ரசிகர்கள் எல்லாருமே சொல்றாங்க. அந்த வகையில் படத்தின் திரைக்கதைதான் இங்கு கதாநாயகன். அது ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்துப் போனது.
படத்தில் எளிமையான ஆனால் இன்றைய 2கே கிட்ஸ்களுக்குத் தேவையான ஒரு கதையை அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. இந்த ஆண்டின் மெகா பிளாக்பஸ்டர் மூவி இதுதான். 100 கோடியை அசால்டாகத் தட்டித் தூக்கி மாஸ் காட்டியது டிராகன். படத்தில் நடித்த எல்லா நடிகர்களுமே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். குறிப்பாக பிரதீப் ரங்கநாதன், கயோடு லோஹர் நடிப்பு பிரம்மாதம்.
டிராகன் படக்குழுவிற்கு பாராட்டு மேல் பாராட்டு குவிந்து வருகிறது. ரஜினி, கமலைத் தொடர்ந்து விஜயிடம் வாழ்த்து பெற்றுள்ளனர். இதுகுறித்து இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சியான தகவலைத் தெரிவித்துள்ளார்.
விஜய் சாரை பார்த்தவுடன் ஆனந்தத்தில் கண்கள் கலங்கியது. எதுக்கு அவர் மேல் இவ்வளவு அன்பு என்றால் அதெல்லாம் உங்களுக்கு சொன்னா புரியாது. விஜய் சார் கிரேட் ரைட்டிங் ப்ரோன்னு சொன்னார். இது போதும் எனக்கு என்றார் டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து.
இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தொடர்ந்து அவரது அடுத்த படங்களுக்கும் எதிர்பார்ப்பு குவிந்து வருகிறது. இளம் இயக்குனர் என்றதும் இளசுகளின் நாடித்துடிப்பை உணர்ந்து அதற்கேற்ப படம் எடுத்துள்ளார் என்பதையே காட்டுகிறது இந்த வெற்றி.