மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, தமிழ்நாட்டில் இருந்து தான் அதிக அளவு வரி பணம் தருகிறோம் என்று கூறுகிறார்கள். ஒரு ரூபாய் தந்தால் ஏழு பைசா தான் திரும்புகிறது என்கிறார்கள். அப்போது மற்ற சலுகைகள் எல்லாம் எங்கிருந்து வருகிறது. இவர்களுடைய வாதமே முதலில் தவறு என்று கூறினார். இதற்கு தற்போது திமுக கட்சியின் இபி கனிமொழி பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,
நீங்கள் தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் ஏளனம் செய்வதைத்தான் இத்தனை காலமாய் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். வரலாற்றில் தமிழ் மக்களை பழித்தவர்களின் நிலை என்ன என்பதை அம்மையார் நிர்மலா சீதாராமன் அவர்கள் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழுக்காகவும், எங்களது உரிமைகளுக்காகவும் போராடுவது உங்களுக்கு ஏளனத்திற்கு உரியதாக தோன்றுகிறதா? தமிழர்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் மறுபடியும் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று பதிவிட்டுள்ளார்.