NEEK Movie: சினிமா பின்னணி இல்லாதவர்களுக்குதான் அந்த துறையில் நுழைவது மிகவும் கடினம். ஆனால், திரைப்பட துறையில் நடிகராகவோ, இயக்குனராகவோ, தயாரிப்பாளராகவோ இருந்தால் தங்களின் குடும்பத்தில் இருப்பவர்களை, உறவினர்களை சுலபமாக சினிமாவுக்கு கொண்டு வருவர்கள். அப்படிதான் பிளஸ் டூ படித்துக்கொண்டிருந்த தனது அக்கா மகன் பவிஷை நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் மூலம் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.
ஆனால் பவிஷுக்கோ நடிப்பே வரவில்லை. ஒவ்வொரு காட்சியிலும் தனுஷ் எப்படி நடித்துக்காட்டினாரோ அதை அப்படியே காப்பி எடுத்து நடித்தார் பவிஷ். எனவே, படம் பார்த்தவர்கள் பவிஷ் குட்டி தனுஷ் போல இருக்கிறார், அவரை போலவே நடிக்கிறார் என கமெண்ட் அடித்தனர்.
இப்போது படம் ஓடிடியில் வெளியானபின் பலரும் சமூகவலைத்தளங்களில் பவிஷின் நடிப்பை கிண்டலடித்து வருகிறார்கள். நடிப்பும் வரல, டான்ஸும் வரல.. மொத்தத்தில் இவர் ஒரு ஹீரோ மெட்டீரியலே இல்ல’ எனவும் பலவும் பதிவிட்டு வருகிறார்கள். ஒருபக்கம், அனிகாவின் நடிப்பும் அபத்தமாக இருக்கிறது, அவர் அழுகிறாரா சிரிக்கிறாரா என்பதே தெரியவில்லை என வீடியோ மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்கள்.
காதல் கொண்டேன் வந்தபோது தனுஷுக்கு அது 2வது படம். ஆனால், நடிப்பில் அசத்தியிருந்தார். முதல் படமான துள்ளுவதோ இளமை படத்தில் கூட நன்றாகவே நடித்திருந்தார். ஆனால், பவிஷுக்கோ நடிப்பு வரவில்லை. தனுஷ் சொன்னதை அப்படியே செய்து சமாளித்து ஒப்பேற்றிவிட்டார். படம் ஓடிடியில் வெளியானபின் இதுதான் இப்போது ட்ரோலில் சிக்கியிருக்கிறது.
#image_title
சிலர் பவிஷையும், சிலர் அனிகாவையும் நக்கலடிக்க பலரும் தெரியாம இந்த படத்தை பார்த்துட்டேன். நல்லவேளை தியேட்டர்லா பார்க்கல என பதிவிட்டு கிண்டலடித்து வருகிறார்கள். படமே மொக்கை. இதுல பவிஷ், அனிகா ரெண்டு பேரோட நடிப்பு சகிக்க முடியல.. ரொம்ப கிரிஞ்சா இருக்கு.. எனவும் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.
அதேநேரம், சிலரோ, பவிஷோட முகத்துல இருக்க இன்னசண்ட் அவருக்கு பிளஸ்ஸா இருக்கு. ஆனா, நல்லா நடிக்க வேண்டிய சீன்லயெல்லாம் சொதப்பியிருக்கிறார் என பதிவிட்டு வருகிறார்கள். ஓடிடி ரிலீசில் படம் கடுமையான ட்ரோலை சந்தித்திருப்பது தனுஷுக்கோ அதிர்ச்சியை கொடுத்திருக்கும் என்கிறார்கள்.