சவுக்கு சங்கர் வீடு சூறை- வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
Top Tamil News March 25, 2025 03:48 AM

சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுநீர் ஊற்றிய விவகாரத்தில் பதிவான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் வசித்து வருபவர் ஊடகவியலாளர் சவுக்கு சங்கர். யூடியூபில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், இவருக்கு எதிராக சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, ஜாமின் பெற்று வெளியே வந்த இவர், தொடர்ந்து யூடியூபில் சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ பதிவிட்டுவருகிறார். தூய்மைப் பணியாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாகக் கூறி இவர் வீட்டின் மீது இன்று (மார்ச் 24) காலை தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுக்கு சங்கர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டார். 



மேலும் இச்சம்பவம் தொடர்பாக சவுக்கு சங்கரின் தாயார் கமலா கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். சவுக்கு சங்கர், காவல் ஆணையரகத்தை குற்றம் சாட்டிய நிலையில், சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுநீர் ஊற்றிய விவகாரத்தில் பதிவான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.