விழுப்புரம் மாவட்டம் அன்னியூர் அருகே உள்ள டி. கொசப்பாளையம் கிராமத்தில் ஏரி கால்வாய் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தக் கால்வாயில் நீர் வெளியேறத் தடையாக இருந்த பாறையை வெடிவைத்து தகர்க்க முடிவு செய்யப்பட்டது.
அப்போது பாறையை அகற்ற வைத்த வெடி, வெடித்துச் சிதறியது. வெடி வெடித்ததில் ஏரியின் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் 10 வயது மகள் காயத்ரியின் தலையில் பாறை விழுந்தது.
தலையில் படுகாயம் அடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் வெடி விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில், உரிய அனுமதியின்றி ஊராட்சி மன்றத் தலைவர் பாறைக்கு வெடி வைத்தபோது சிறுமி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.