விரைவு வர்த்தகத்தால் கமர்சியல் கோல்டு ரூம்கள் தேவை அதிகரிப்பு..... மார்க்கெட் ஷேரை அதிகரிக்க திட்டமிடும் ப்ளூஸ்டார்....

ஹோட்டல், உணவகம், கஃபே துறை, விரைவு வர்த்தகம், உணவு சில்லறை விற்பனை மற்றும் சுகாதாரப் பராமரிப்பு, ஐஸ்கிரீம் தயாரிப்பு ஆகியவற்றினால் வணிக குளிர்பதனத் தொழில் வலுவான வளர்ச்சியை கண்டுள்ளதாக ப்ளூ ஸ்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி.தியாகராஜன் தெரிவித்தார். வாழ்க்கை முறை மாறி வருவதாலும், விரைவு பொருட்களை டெலிவரி செய்யும் தேவை அதிகரித்துள்ளதாலும் வளர்ச்சி வேகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ப்ளூ ஸ்டார் நிறுவனம் அதன் தயாரிப்பு மேம்படுத்தவும் செயல்பாடுகளை நெறிப்படுத்தவும் டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் தொழில்நுட்பங்களில் குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ப்ளூஸ்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி.தியாகராஜன், வரவிருக்கும் கோடைக்காலம் இந்த நிதியாண்டிலும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்குவகிக்கும் என்றார். சுற்றுச்சுழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், ஆற்றல் திறன் கொண்ட புதுமையான குளிர்பதன வசதிகளை உருவாக்குவதே தங்களின் இலக்கு என்றும் கூறினார். மேலும் 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியா சுமார் 450 மில்லியன் நடுத்தர வர்க்க நுகர்வோர் உள்ள நிலையில், அறை ஏசிகளுக்கான சந்தை பெரும் திருப்புமுனையாக அமையும் என்றார். இதுமட்டும் இல்லாமல் அடுத்த சில ஆண்டுகளில் அதிவேகமாக வளரத் தயாராக உள்ளது என்றும் கூறினார்.வளர்ந்து வரும் தேவையை திறம்பட பயன்படுத்திக் கொள்ள திறன்கள் மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்காக ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு , உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலியில் நிறுவனம் தொடர்ந்து குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்து வருவதாக அவர் கூறினார்.ப்ளூ ஸ்டாரின் கமர்சியல் ரெஃப்ரிஜிரேட்டர், கோல்டு ரூம் சேவை ஆகியவற்றின் சந்தை பங்களிப்பு வரும் 2028ம் ஆண்டுக்குள் 33-35 உயர்த்த திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் கூறினார். தற்போது இதன் சந்தை பங்களிப்பு 30 சதவிகிதமாக உள்ளது.