“இன்றோடு முடிவடைகிறது” சொந்த நிலம் வைத்திருக்கும் விவசாயிகளே… உடனே மறக்காம போங்க..!!
SeithiSolai Tamil March 31, 2025 01:48 PM

விவசாயிகளுக்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலமாக விவசாயிகள் பலன் அடைந்து வருகிறார்கள். விவசாயிகள் பல திட்டங்களில் பலன்களை பெறுவதற்கு ஒவ்வொரு முறையும் தங்களுடைய நில உடமை விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதனால் காலதாமதம் ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இதனை தவிர்க்கும் விதமாக விவசாயிகளுடைய அனைத்து விவரங்களையும் மின்னணு முறையில் சேகரித்திட தமிழ்நாட்டில் வேளாண் நல திட்டமானது செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த திட்டம் குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண், கைப்பேசி எண், நில உடமை விவரங்களை இணைக்கும் முகாம்கள் அனைத்து கிராமங்களிலும் நடந்து வருகிறது.

இதன் மூலமாக விவசாயிகள் தங்களுடைய நில உடமை தொடர்புடைய அனைத்து விவரங்களையும் ஒருங்கிணைத்த பிறகு ஆதார் போன்ற தனித்துவமான தேசிய அளவில் அடையாள எண் ஒன்று அவர்களுக்கு வழங்கப்படும். இந்த எண் விவசாயிகள் பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டம், பயிர் காப்பீடு திட்டம் போன்ற மத்திய மாநில அரசுகளின் திட்டங்களில் பயன் பெறுவதற்கு மிக அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் தங்கள் கிராமங்களில் நடக்கும் இந்த சிறப்பு முகாம்கள் அல்லது இ சேவை மையங்களுக்கு நேரடியாக சென்று எவ்வித கட்டணமும் இன்றி மார்ச் 31ஆம் தேதிக்குள்(இன்று ) இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்து பயன்பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.