“மனோஜ் பாரதி இறந்த செய்தி மிகுந்த வருத்தம் அளிக்கிறது…”- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல்….!!
SeithiSolai Tamil March 26, 2025 06:48 AM

பிரபல இயக்குனரான பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா(49) மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, இயக்குநர் இமயம் ஐயா திரு. பாரதிராஜா அவர்களின் மகனும், தமிழ்த் திரையுலகக் கலைஞருமான திரு. மனோஜ் பாரதி அவர்கள், உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

ஐயா திரு. பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயரமான நேரத்தைக் கடந்து வரும் வலிமையை இறைவன் அவர்களுக்கு வழங்கட்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.