எடப்பாடி தலைமையிலான அதிமுக., குழு தில்லியில் அமித் ஷாவுடன் சந்திப்பு!
Dhinasari Tamil March 26, 2025 07:48 AM

#featured_image %name%

தில்லி சென்றுள்ள அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின் போது அ.தி.மு.க., மூத்த தலைவர்கள், எம்.பி.,க்கள் உடன் இருந்தனர்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தில்லிக்கு பயணம் செய்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தில்லிக்கு புறப்பட்டு சென்றனர்.

எடப்பாடி பழனிசாமியின் தில்லி பயணம் குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் தெரிவிக்கையில், தில்லியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அ.தி.மு.க. அலுவலகத்தைக் காணச் செல்வதாகத் தெரிவித்தனர். இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு அரசியல் கருத்துகள் பகிரப்பட்டன. எடப்பாடி பழனிசாமியின் தில்லி பயணம் குறித்து திமுக., அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து தெரிவித்தார்.

இந்நிலையில், தில்லி சென்ற எடப்பாடி பழனிசாமி அங்கே புதிதாகக் கட்டப்பட்டு காணொலி மூலம் திறந்து வைக்கப்பட்ட அதிமுக அலுவலகத்தை பார்வையிட்டார். பின்னர் பேசிய அவர், “பிரத்யேகமான எவரையும் பார்க்க வரவில்லை. தில்லியில் திறக்கப்பட்டுள்ள எங்களது கட்சி அலுவலகத்தைப் பார்வையிடவே வந்துள்ளேன்” என்றார்.

எனினும், வரும் 2016 சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமியின் திடீர் பயணம் கூட்டணி குறித்தாக இருக்கலாம் என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். இத்தகைய சூழலில், தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு சுமார் இரண்டு மணி நேரம் நீடித்துள்ளது. அவரது சந்திப்பின் போது அதிமுக., எம்பி.,க்கள், மூத்த தலைவர்கள் உடன் இருந்தனர்.

இதனிடையே, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக்கு ஆயத்தமாகிறாரா எடப்பாடி பழனிசாமி என அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொள்கை வேறு கூட்டணி வேறு என அண்மையில் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அண்ணாமலை, நாட்டின் உள்துறை அமைச்சரைச் சந்திக்க எவர் வேண்டுமானாலும் செல்லலாம் என்றார். பின்னர் தன் எக்ஸ் தளப் பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது… “தமிழகத்தில் ஒரு புது வகையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது, சாராய வெள்ளம். நான் உங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறேன், 2026ஆம் ஆண்டு தமிழகத்தில் NDA ஆட்சி அமைந்ததும் சாராய வெள்ளம் வடிந்துவிடும். இந்த சாராய வெள்ளமும் ஊழல்களும் முற்றிலும் நிறுத்தப்படும் – மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அவர்கள்.”

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை சந்தித்த பின்னர், அமித் ஷா எக்ஸ் தளத்தில் இந்தி மற்றும் தமிழில் பதிவிட்டுள்ளார். அதில் 2026-ல் தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமையும். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு மதுவெள்ளம், ஊழல் புயல் முடிவுக்கு வந்துவிடும் என்று தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கருத்து, பாஜக., அதிமுக. கூட்டணியின் அச்சாரமாக பார்க்கப்படுகிறது.

News First Appeared in

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.