தொடர்ந்து 3 நாட்கள் தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், இன்று தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
(திங்கள் கிழமை) மார்ச் 24ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு, 120 ரூபாய் சரிவடைந்து, 65,720 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று (மார்ச் 25) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.65,480க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று (மார்ச் 26) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.65,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,795க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 4 நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 111 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ரூ.1,11,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
25-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,480
24-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,720
23-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,840
22-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,840
21-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,160