காய்கறி விலை கடும் சரிவு... இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி!
Dinamaalai March 27, 2025 01:48 PM

தமிழகத்தில் காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பருவ மழைக்குப் பின்னர் தற்போது வெயில் அடித்து வருவதாலும், அவ்வப்போது மிதமான மழை பெய்து வருவதாலும், காய்கறிகளின் விளைச்சல் கணிசமாக அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகளின் வரத்தும் அதிகரிக்க துவங்கியுள்ளது. தற்போது பரவலாக அதிக விளைச்சல் காரணமாக ஏறக்குறைய அனைத்து காய்கறிகளின் விலைகளுமே சரிந்துள்ளது.

பல மாதங்களுக்குப் பின்னர் காய்கறிகளின் விலை கிலோ ரூ.10க்குள்ளாக விற்பனையாகி வருகிறது. தற்போதைய விலை நிலவரப்படி திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் 1 கிலோ தக்காளி ரூ.3க்கும், முருங்கைக்காய் 1 கிலோ ரூ.7க்கும், பீட்ரூட் 1 கிலோ ரூ.4க்கும், சுரக்காய் 1 கிலோ ரூ.2க்கும், கத்தரிக்காய் 1 கிலோ ரூ.7க்கு விற்பனையாகி வருகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.