இன்று வங்கிகள் இயங்குமா.. இயங்காது.. RBI உத்தரவு சொல்வதென்ன!
ET Tamil March 27, 2025 02:48 PM
இன்று ஜம்மு காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகரில் உள்ள வங்கிகளுக்கு புனித தினமான ஷாப்-இ-காத்ர், ஜுமத்-உல்-விதா மற்றும் ரம்ஜான் ஈத் காரணமாக வங்கிகள் விடுமுறையாக உள்ளது. அதேசமயம் தமிழ்நாட்டில் உள்ள வங்கிகள் ஞாயிற்றுக்கிழமைகளைப் போலவே இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளையும் வாராந்திர விடுமுறை நாட்களில் மட்டுமே இயங்காது. இன்று தமிழ்நாட்டில் உள்ள வங்கிகள் இயங்கும்.இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வங்கி விடுமுறை நாட்கள் உள்ளூர் பண்டிகைகள் மற்றும் தேசிய விடுமுறை நாட்களைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகின்றன. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒவ்வொரு ஆண்டும் அதன் அதிகாரப்பூர்வ வங்கி விடுமுறை பட்டியலை வெளியிடுகிறது. அதன் அடிப்படையில் இனி வரும் நாட்களில் எந்தெந்த மாநிலங்களில் வங்கி விடுமுறையாக இருக்கும் என்பதைப் பார்க்கலாம். இந்த வார வங்கி விடுமுறை நாட்களின் முழு பட்டியல்1. மார்ச் 27 (வியாழக்கிழமை) – ஷப்-இ-காதர் (ஜம்மு காஷ்மீர்)2. மார்ச் 28 (வெள்ளிக்கிழமை) – ஜுமத்-உல்-விதா (ஜம்மு காஷ்மீர்)3. மார்ச் 30 (ஞாயிற்றுக்கிழமை) – வாராந்திர விடுமுறை (இந்திய முழுவதும்)4. மார்ச் 31 (திங்கள்) – ரம்ஜான் பெருநாள் (மிசோரம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் தவிர பெரும்பாலான மாநிலங்களில்)மார்ச் 29 ஐந்தாவது சனிக்கிழமை என்பதால் வங்கிகள் திறந்திருக்கும் என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். வங்கிகள் மூடப்பட்டாலும், ATM, UPI மற்றும் ஆன்லைன் சேவைகள் கிடைப்பதி பிரச்சனை இருக்காது.மார்ச் 31 ரம்ஜான் என்பதால் பெரும்பாலான வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.