ரூ.75 லட்சம் அபராதம் கட்டுங்க.. HDFC வங்கிக்கு உத்தரவிட்ட RBI.. எதுக்குன்னு தெரியுமா?

மிகப்பெரிய தனியார் துறை வங்கியான HDFC வங்கி மீது இந்திய ரிசர்வ் வங்கி சுமார் ரூ.75 லட்சம் அபராதம் விதித்துள்ளது. HDFC வங்கி, ரிசர்வ் வங்கியின் சில முக்கிய விதிமுறைகளை பின்பற்றத் தவறியதால் வங்கிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக RBI தெரிவித்துள்ளது.ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி, HDFC வங்கி சில வாடிக்கையாளர்களின் ஆபத்து விகிதங்கள (குறைந்த, நடுத்தர, அதிக ரிஸ்க்) வகைப்படுத்தவில்லை எனக் கூறியுள்ளது. மேலும் சில வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான வாடிக்கையாளர் அடையாளக் குறியீட்டை (UCIC) வழங்குவதற்கு பதிலாக, பல அடையாளக் குறியீடுகளை வங்கி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இது தவிர, மார்ச் 32, 2024 நிலவரப்படி வங்கியின் நிதி நிலையின் அடிப்படையில் மேற்பார்வை மதிப்பீட்டிற்கான ஆய்வையும் ரிசர்வ் வங்கி நடத்தியது.
NBFC நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்!HDFC வங்கி மட்டுமின்றி, வங்கி சாரா நிதி நிறுவனமான கே.எல்.எம். ஆக்சிவா ஃபின்வெஸ்ட் நிறுவனத்திற்கும் ரிசர்வ் வங்கி ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இது ஒரு வைப்புத்தொகை அல்லாத நடுத்தர அளவிலான நிறுவனமாகும். இந்நிருவனம் ரிசர்வ் வங்கியின் 2023 விதிமுறையின்கீழ் ஈவுத்தொகை அறிவிப்பு தொடர்பான விதிகளை பின்பற்றததற்காக இந்த அபராதம் விதித்துள்ளதாக தெரிவித்துள்ளது.