இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2025 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் தனது சொந்த ஊரான குவாஹாத்தியில் அணியை வழிநடத்தியது, 23 வயதான இளம் வீரருக்கும் உள்ளூர் ரசிகர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. தனது மாநிலத்திலிருந்து IPL அணியை வழிநடத்தும் முதல் வீரராக பராக் சாதனை படைத்துள்ளார். காயத்தில் இருந்து மீண்டுவரும் நிலையில் உள்ள சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக பராக் இடைநிலை கேப்டனாக பொறுப்பேற்றார். இந்நிலையில் நேற்று போட்டி நடந்து கொண்டிருக்கும் போது ஒரு ரசிகர் திடீரென மைதானத்துக்குள் நுழைந்து பராகின் காலில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பராக் டாஸ் நேரத்தில் மைக்கைப் பிடித்ததும், குவாஹாத்தி ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்கள் கோஷத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். “இந்த அணிக்குத் தலைவராக இருப்பது எனக்கு பெருமை அளிக்கிறது. நான் 17-வது வயதில் IPLல் எனது பயணத்தைத் தொடங்கினேன். இப்போது இந்த நிலைக்கு வந்திருக்கிறேன் என்றால், அது நிர்வாகம் என்மேல் வைத்த நம்பிக்கையின் வெளிப்பாடாகும்,” என பராக் உரையாற்றினார். எனினும், சில சமூக ஊடக பயனர்கள் இந்த ரசிகர் சம்பவம் ஒருவகை நாடகமாக இருக்கலாம் என சந்தேகத்துடன் விமர்சனம் செய்துள்ளனர்.
இந்த போட்டி குவாஹாத்தியில் நடைபெற்ற போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் ராஜஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன்மூலம் பராக் தலைமையிலான RR அணி தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் மிகப்பெரிய தோல்விகளை சந்தித்துள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது ரசிகர் ஒருவர் திடீரென ஓடிவந்து ரியான் பராக் காலில் விழுந்த நிலையில் அந்த ரசிகரை அவர் ஆர தழுவி கட்டி அணைத்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் ரியானை கலாய்க்கிறார்கள். அதாவது பெரிய நட்சத்திரங்களுக்கு இப்படி நடந்தால் சரி ரியாான் போன்று இளம் வீரர்களுக்கு எப்படி இது சாத்தியமாகும் என்று விமர்சிக்கிறார்கள். ஒருவர் 10,000 ரூபாய் பணம் கொடுத்து ரியான் தன் காலில் அந்த ரசிகரை விழ சொன்னதாக பதிவிட்டுள்ளார். மேலும் இதேபோன்று பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு ரியானை கலாய்க்கிறார்கள்.