18-வது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 97 ரன்கள் வரை எடுத்தார்.
இதைத்தொடர்ந்து களம் இறங்கிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு வெறும் 232 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. குஜராத் அணியில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 74 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டநாயகன் விருதினை பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பெற்றார்.
இந்நிலையில் பஞ்சாப் அணியில் இடம்பெற்ற ஆஸ்திரேலிய அணியின் வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் இப்போட்டியில் முக்கிய பங்கு வகித்தார். ஆறாம் இடத்தில் களமிறங்கிய அவர், கேப்டனுக்கு சிறந்த துணையாக இருந்து சில அற்புதமான அடிகளுடன் ரசிகர்களை ரசிக்க வைத்தார்.
15வது ஓவரின் இரண்டாவது பந்தில், bowler முகமது சிராஜ் ஃபுல் லெங்க்தில் வீசிய பந்தை, ஸ்டாய்னிஸ் deep mid-wicket பகுதியை நோக்கி தள்ளினார். அந்த பந்து நேராக போய் ஸ்டேடியத்தில் பவுண்டரிக்கரையை கடந்து நடந்து சென்ற பெண் பாதுகாப்பு அதிகாரியின் காலில் பட்டது. இதில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது.இந்த சம்பவம் ரசிகர்களிடையே சற்று பதட்டத்தை ஏற்படுத்தியது. ஸ்டாய்னிஸ், தனது இனிங்ஸில் இரண்டு சிக்ஸர்களை அடித்து, பஞ்சாப் அணி ஸ்கோருக்கு முக்கிய பங்களிப்பு வழங்கினார். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த விபத்து நடந்துவிட்டது. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.