இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 18வது ஐபிஎல் போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த 22ஆம் தேதி இந்த போட்டி தொடங்கிய நிலையில் நேற்று அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்ற நிலையில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக துருவ் ஜூரேல் 33 ரன்கள் எடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து கொல்கத்தா அணி களமிறங்கிய நிலையில் 17.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக குவிண்டன் டி காக் 97 ரன்கள் வரை எடுத்தார். இந்த போட்டியின் மூலம் கொல்கத்தா அணி தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்து தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ளது. மேலும் ராஜஸ்தான் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் 10-வது இடத்தில் இருக்கிறது.