இந்த வார தொடக்கத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து அந்த அணியின் நட்சத்திர வீரர் கே.எல். ராகுல் அணியில் இணைந்தார். ராகுல் தனது மனைவி அதியா ஷெட்டிக்கு பெண் குழந்தை பிறந்ததன் காரணமாக தொடக்கப் போட்டியைத் தவறவிட்டார். இந்த மகிழ்ச்சியான நிகழ்வை டெல்லி அணியினர் வீடியோ வெளியிட்டு கே.எல் ராகுலுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்கள்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பல்வேறு தளங்களில் பரவலான பாராட்டுகளைப் பெற்றது. இந்நிலையில் கே.எல் ராகுல் கேப்பிட்டல்ஸ் அணியின் ஆலோசகர் கெவின் பீட்டர்சனின் பேட்டிங்க் ஸ்டைலை ரீகிரியேட் செய்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. ஐபிஎல் (2022) தொடரில் முதல் சீசனில் இருந்து கடந்த சீசன் வரை ராகுல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடினார். மெகா ஏலத்திற்கு முன்னதாக அந்த அணி அவரை விடுவித்தது, இறுதியில் கேபிடல்ஸ் அணி அவரை 14 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.