வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த வங்கியின் ஏடிஎம்மிற்கு பதிலாக வேறு நெட்வொர்க்கின் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்தால், அவர்கள் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.17 கட்டணம் செலுத்த வேண்டும். இது மே 1 முதல் ரூ.19 ஆக அதிகரிக்கும். இதுதவிர, வேறு வங்கியின் ஏடிஎம்மிலிருந்தும் பேலன்ஸ் செக் செய்வதற்கு ரூ.6 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அது இனி ரூ.7 ஆக அதிகரிக்கப்படும்.
வங்கி பயனர் தனது மாதாந்திர இலவச பரிவர்த்தனை வரம்பிற்குப் மேல் ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுக்கும்போது இந்தக் கட்டணங்கள் பொருந்தும். மெட்ரோ நகரங்களிலும் பிற நிலை நகரங்களிலும் மாதாந்திர இலவச பரிவர்த்தனைகளின் வரம்பு வங்கிக்கு வங்கி மாறுபடும்.
பரிமாற்றக் கட்டணம் அதிகரிப்புக்கு என்ன காரணம் என்பதையும் வாடிக்கையாளர்ங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு வங்கி தனது வாடிக்கையாளர்களில் ஒருவர் மற்றொரு வங்கியின் ஏடிஎம்மைப் பயன்படுத்தி பணம் எடுக்கும்போது, அந்த வங்கி மற்றொரு வங்கிக்கு செலுத்தும் தொகைதான் பரிமாற்றக் கட்டணம் ஆகும்.