ஐபிஎல் 2025 தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றார். ஆரம்ப ஆட்டத்தில் இஷான் கிஷன் சதம் அடித்து SRH அணியை வெற்றியுடன் தொடக்கமளிக்கச் செய்தபோது, காவ்யா மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். ஆனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான இரண்டாவது ஆட்டத்தில் நிலைமை முற்றிலும் மாறியது. SRH பந்துவீச்சாளர்களை நிக்கலஸ் பூரன் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆட்டையெடுத்து சண்டையின்றி சுட்டெறிந்தனர். 191 ரன்கள் இலக்கை வெறும் 16.1 ஓவர்களில் லக்னோ அணி எளிதாக கடந்தபோது, காவ்யா தன்னிச்சையாக காட்டும் உணர்வுகள் தொலைக்காட்சி பார்வையாளர்களுக்கு பளிச்சென்று தெரிய வந்தன.
பவர் பிளேயிலேயே நிக்கோலஸ் பூரனின் அதிரடி ஆட்டம் SRH-க்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. வெறும் 26 பந்துகளில் 70 ரன்கள் அடித்த பூரன், ஆறு சிக்ஸர் மற்றும் ஆறு பவுண்டரிகளால் SRH பந்துவீச்சாளர்களை பயங்கரமாக தகர்த்தார். பறந்து செல்லும் பந்துகளும், மார்சின் அதிரடியும் காவ்யாவின் முகத்தில் நெருக்கடி மற்றும் ஏமாற்றமாக தெரிந்தது. அதாவது நேற்று நடைபெற்ற 7-வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் மற்றும் லக்னோ அணிகள் மோதியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய லக்னோ அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர்களுக்கு பெரும் சவாலாக அமைந்தது. இறுதியில் லக்னா அணி 16.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தது. இதனால் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.
மேலும் இந்த போட்டிக்கு பிறகு காவ்யா மாறனின் உணர்வுகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது.