ஐபிஎல் 2025 18 ஆவது சீசன் கடந்த 22 ஆம் தேதி பெரும் கோலாகலத்துடன் தொடங்கியது.இந்த நிலையில், முதல் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியை 7 விக்கெட்டுகளால் வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடியிருந்தார்கள்.
அந்தவகையில் ஒரு தீவிர ரசிகர் தனது திருமண விழாவில் தான் RCB வென்றதும் மேடையில் குதித்தும், கைதட்டியும், நண்பர்களை கட்டிபிடித்து கொண்டு கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அப்போது மணமகள் ஷாக்காக என்ன நடந்தது என்று தெரியாமல் நிற்கினர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
View this post on Instagram