ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் போட்டியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில் அதற்கு முக்கிய காரணமாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் ஓய்வு பெற வேண்டும் என்று விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல் இந்தியாவை வெற்றி பெற வைத்து கோப்பையை வென்று கொடுத்தனர். இந்நிலையில் யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங் நான் மட்டும் இந்திய அணியின் பயிற்சியாளராக வந்தால் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு எப்போதுமே ஓய்வு கொடுக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
இது பற்றி அவர் கூறியதாவது, என்னை மட்டும் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமித்தால் நான் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை ஒருபோதும் இந்திய அணியில் இருந்து நீக்க மாட்டேன். அவர்களை வைத்து இந்தியாவை தோற்க முடியாத ஒரு அணியாக உருவாக்குவேன். அவர்களுடைய திறமைகளை யார் வெளியே கொண்டு வருவார்கள். மக்கள் எப்போதும் அவர்களை வெளியேற்றுவதில் மட்டும்தான் குறியாக இருக்கிறார்கள். ரோஹித் மற்றும் விராட் கோலியை நீக்குங்கள் என்று கூறும்போது அவர்களை ஏன் நீக்க வேண்டும் என்று நான் கேட்கிறேன். அவர்கள் கடினமான சூழலை கடந்த செல்லும் நிலையில் நான் உங்களிடம் இருக்கிறேன் என்று அந்த குழந்தைகளிடம் கூற விரும்புகிறேன்.
அதாவது ரோஹித் மற்றும் விராட் கோலியை அவர் குழந்தைகள் என்று குறிப்பிட்டார். அதோடு ரஞ்சி தொடரில் விளையாட வேண்டும் என்று அவர்களிடம் நான் சொல்லுவேன் இல்லையெனில் ரோகித் சர்மாவை 20 கிலோமீட்டர் தூரம் ஓட வைப்பேன். இதை யாரும் செய்யாமல் அவர்களை வெளியேற்ற வேண்டும் என்கிறார்கள். நான் அவர்களின் தந்தை போன்று இருப்பேன். தோனி ,யுவராஜ் சிங் உட்பட எந்த ஒரு வீரர்களையும் நான் இதுவரை வேறுபடுத்தி பார்த்ததில்லை. அதே நேரத்தில் ஒரு விஷயம் தவறு என்றால் கண்டிப்பாக தவறு என்று தான் சொல்வேன் என்றார். மேலும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக யுவராஜ் சிங் தந்தை பேசியது வைரலாகி வருகிறது.