ரூ.66 ஆயிரத்தை தாண்டி ரூ.67 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை.. இதுவரை இல்லாத உச்சம்..!
Webdunia Tamil March 28, 2025 07:48 PM

தங்கம் விலை இன்று ஒரே நாளில் ஒரு கிராமுக்கு 105 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் விலை ரூ. 67 ஆயிரத்தை நெருங்கி உள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து நிலவரத்தை பார்ப்போம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 105 ரூபாய் உயர்ந்து ரூபாய் 8,340 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 840 உயர்ந்து ரூபாய் 66,720 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 9,083 எனவும் ஒரு சவரன் ரூபாய் 72,664 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 114.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 114,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.