எலான் மஸ்கை நேரில் பார்க்க ஆசையா…? ரூ.72.16 லட்சம் வேணும்… ஓய்வு பெற்ற விமானியை நம்ப வைத்து பலே மோசடி.. உஷாரய்யா உஷாரு…!!
SeithiSolai Tamil March 28, 2025 08:48 PM

பரிதாபாத் பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற விமானி ஒருவரை உலகின் பிரபல பணக்காரர் எலான் மஸ்க்கை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என நம்ப வைத்து, மோசடியாளர்களால் ரூ.72.16 லட்சம் பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது பரிதாபாத் பகுதியில் சக்தி சிங் லும்பா என்பவர் ரசித்து வருகிறார். இவர் ஒரு ஓய்வு பெற்ற விமானி ஆவார். இந்நிலையில்‘அன்னா ஷெர்மன்’ எனும் பெயரில் ஒரு சமூக ஊடக கணக்கு மூலம் அவரை தொடர்புகொண்ட ஒருவர், எலான் மஸ்க்கின் நிறுவன மேலாளராக எனக்கூறி அறிமுகமான நிலையில் எலான்மஸ்கை சந்திக்க வைப்பதாக நம்பிக்கை கூறியுள்ளார்.

இதற்காக ‘மேய் மஸ்க்’ எனும் மற்றொரு கணக்கை அவர் பின்தொடரச் சொல்லி, அது எலான் மஸ்க்கின் தாயார் என நம்ப வைத்தனர்.இந்நிலையில், ஷெர்மன், எலான் மஸ்க்கின் நிறுவனங்களில் முதலீடு செய்தால் இந்தியா வருகையின் போது அவரை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்வதாக கூறிய நிலையில் துவக்கமாக ரூ.2.91 லட்சம் முதலீடு செய்த லும்பா, தொடர்ந்து அவர்களிடம் நம்பிக்கையுடன் பணம் செலுத்தி வந்தார்.

ஒரு கட்டத்தில், மஸ்க் அவருக்கு பரிசாக ரோலெக்ஸ் வாட்ச் அனுப்ப உள்ளதாக கூறி புகைப்படமும் அனுப்பி, அவரை மேலும் நம்ப வைத்த நிலையில் இந்த தந்திரத்தில் சிக்கி, லும்பா மொத்தமாக ரூ.72.16 லட்சம் பணத்தை இழந்துவிட்டார்.பின்னர், சந்தேகம் ஏற்பட்டு பணத்தை திருப்பி வழங்குமாறு கேட்டபோது, ‘நிறுவனத்தின் கணக்கு முடக்கப்பட்டுள்ளது, மேலும் பணம் முதலீடு செய்தால் திருப்பி தரப்படும்’ என கூறியதுடன், எலான் மஸ்க் நேரில் வந்து பணத்தைத் தருவார் என்ற வாக்குறுதியும் அளிக்கப்பட்டது.

இதனால் பதட்டமான லும்பா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக சைபர் குற்றப் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இது தொடர்பாக”நான் இந்தியா கணக்குகளில் பணம் செலுத்தியுள்ளேன், எனவே பணம் மீடிக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என லும்பா கூறியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.