உத்திரப்பிரதேச மாநிலத்தில் மீரட் பகுதியில் ரமலான் மாத இறுதி ஜும்மா வழிபாடுகள் மற்றும் ரம்ஜான் திருநாளை ஒட்டி சாலைகளில் நமாஸ் செய்ய அனுமதி இல்லை என போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் சாலைகளில் தொழுகை நடத்துபவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர்களுடைய பாஸ்போர்ட் ரத்து செய்யப்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும் என மீரட் நகர காவல் கண்காணிப்பாளர் ஆயுஷ் விக்ரம் சிங் தெரிவித்துள்ளார். ஈத் தொழுகைகளை மசூதி அல்லது நியமிக்கப்பட்ட ஈத்காக்களில் மட்டுமே நடத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மீறி தொழுகையில் ஈடுபடும் நபர்கள் குற்றவியல் வழக்குகளை எதிர் கொள்ள நேரிடும் எனவும் தெரிவித்துள்ளார்.