இந்தியாவில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்துவிட்டது. பெரும்பாலான மக்கள் சிலிண்டர் பயன்படுத்தி வருகிறார்கள். பெண்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் விதமாகவும், சமையலறை பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காகவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் அரசு பெண்களுக்கு இலவச சிலிண்டர் இணைப்பை கொடுத்து வருகிறது. அதாவது இந்த திட்டத்தில் எரிவாயு சிலிண்டர்கள் மானிய விலையில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமையல் கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் வரும் 31ம் தேதிக்குள் கை ரேகையை பதிவு செய்யவில்லை என்றால் சிலிண்டர் கிடைக்குமா என்ற குழப்பம் எழுந்துள்ளது.
மானிய விலையில் சிலிண்டர் பெறும் பயனாளிகள் உண்மை தன்மை சரிபார்ப்பு பணிகள் நடந்து வருகிறது. இதற்கு சிலிண்டர் இணைப்பு யார் பெயரில் இருக்கிறதோ அவர்கள் ஏஜென்சிக்கு சென்று விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும். இந்த பணியை வரும் 31ஆம் தேதிக்குள் முடிக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.