மும்பை நவீ மும்பை பகுதியில் உள்ள கார்கர் பகுதியை சேர்ந்த அஜித் சிங் என்ற ஆப் டாக்சி டிரைவர் ஒருவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 41 வயது பெண்ணை பல முறை பாலியல் வன்கொடுமை மற்றும் பிளாக்மெயில் செய்ததாக புகார் எழுந்துள்ளது.
வொர்லி பகுதியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை வொர்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 2023 பிப்ரவரியில் பெண் ஒருவர் அஜித் சிங் இயக்கிய கார் மூலம் பயணித்துள்ளார்.
அந்த பயணத்தின் போது, அவர் பெண்ணுடன் பழகி, கைபேசி எண்களை பரிமாறிக்கொண்டார். பின்னர் இருவரும் தொடர்பில் இருந்துள்ளனர். 2023 மார்ச் 22 அன்று, வொர்லியில் உள்ள ஓட்டலில் அஜித் சிங் பெண்ணுக்கு மதுபானத்தில் போதை மருந்து கலந்து குடிக்க வைத்துள்ளார்.
அதன் பிறகு அவரது விருப்பத்திற்கு எதிராக பாலியல் பலாத்காரம் செய்து அதனை புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்துள்ளார். அதனை காட்டி மிரட்டி அஜித் பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும், அவர் பெண்மீது ₹10 லட்சம் பிளாக்மெயில் செய்து பறித்ததுடன், பணம் தர மறுத்ததற்காக, அவரது மொபைலை பறித்துக் கொண்டு ஃபேஸ்புக்கில் அவதூறு வார்த்தைகள் எழுதி, “call girl” என கூறி அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது.
தற்போது, இந்திய புதிய நீதிசாசனத்தின் பிரிவுகள் 64, 64(2) (பல முறை பாலியல் வன்கொடுமை), 308(2) (தண்டிப்பு), 351(2) (அச்சுறுத்தல்), 356(2) (அவதூறு) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளியை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக என்.எம் ஜோஷி மார்க் காவல்நிலைய போலீசார் தெரிவித்துள்ளனர்.