iShowSpeed, இயற்பெயர் தரன் ஜேசன் வாட்கின்ஸ். இவர் ஐரோப்பா, தெற்காசியா, தென் அமெரிக்கா மற்றும் ஓஷனியா போன்ற நாடுகளில் சுற்றி வீடியோ எடுத்து பதிவிட்டு வந்தார். இந்நிலையில் தற்போது ‘Love Ladder’ எனப்படும் இந்த ஏணியில் இருபுறமும் பாதுகாப்பு கம்பிகள் இல்லாமல் பள்ளத்தாக்கின் விளிம்பில் அமைந்துள்ளதால், உயிருக்கே ஆபத்தானதாகக் கருதப்படுகிறது.
20 வயதான தரன் ஜேசன், ‘Love Ladder’-இன் உச்சியில் சென்றவுடன் ரொனால்டோவின் பிரபல “SUIII” சைகையை செய்து உற்சாகமாகக் கொண்டாடினார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பின்னர், ஏணியில் பின்புறம் படுத்துக்கொண்டு “Oh my God! Oh my God!” என மீண்டும் மீண்டும் கூறும் வீடியோ, சமூக வலைதளங்களில் 2.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றது. அமெரிக்கா-சீனா தூதரகம் இந்த வீடியோவை மீண்டும் பகிர்ந்து, “சமூக ஊடகங்களில் கலாசார பாலம் அமைக்கும் இளைஞர்களின் தாக்கம் இதுதான்” எனக் குறிப்பிட்டது.
அவரது சீனா பயணம் தொடங்கியதும், சில சமூக ஊடக பயனர்கள், அவருக்கு சீன அரசு பணம் கொடுத்து அழைத்தது எனச் சுட்டிக்காட்டினர். எனினும், அவரது கேமராமேன் Slipz இந்த வதந்தியை நிராகரித்து, தரன் ஜேசன்தனது செலவில் தனிப்பட்ட முறையில் பயணிக்கிறார் என உறுதிப்படுத்தினார். தற்போது ‘Love Ladder’ சீனாவின் முக்கிய சுற்றுலா தலமாக உருவெடுத்து வருகிறது.