நைஜீரிய குத்துச்சண்டை வீரரும், முன்னாள் நைஜீரிய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க லைட் ஹெவி வெயிட் சாம்பியனுமான கேப்ரியல் ஒலுவாசேகுன் “சக்சஸ்” ஒலன்ரெவாஜு, காணாவில் நடந்த ஒரு போட்டி நடுவே திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். போட்டியின் மூன்றாவது ரவுண்டில், எந்த ஒரு குத்தும் வாங்காத நிலையில், அவர் திடீரென பின்னால் சென்று கயிறுகளில் சாய்ந்தார்.
நடுவர் உடனடியாக போட்டியை நிறுத்தி, மருத்துவ குழுவை அழைத்தார். மேடையில் அவருக்கு முதலுதவி வழங்கப்பட்டது, பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டும், 30 நிமிடங்களில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வுக்குப் பிறகு, கானா குத்துச்சண்டை ஆணையம் (GBA) ஒரு அறிக்கையில், ஒலன்ரெவாஜு போட்டிக்குத் தகுதியானவர் என நைஜீரியா குத்துச்சண்டை வாரியம் (NBBC) சான்று வழங்கியிருந்ததாக தெரிவித்தது.
ஆனால், அந்த சாம்பியன் விளையாடிய போட்டியை NBBC அங்கீகரிக்கவில்லை என்றும், அவர் ஆரம்பத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த மற்றொரு போட்டிக்கான எடை பரிசோதனையில் தோல்வியடைந்ததால், அந்த போட்டியிலிருந்து விலகினார் என்றும் கூறப்படுகிறது.
கடனாளிகளிடம் பணம் செலுத்த முடியாத சூழ்நிலையில், நாடு திரும்ப முடியாமல் காணாவில் தங்கியிருந்தவர், ஒரு மேடையாளர் வழங்கிய மற்றொரு போட்டியில் பங்கேற்றதாக தெரிகிறது. NBBC செயலாளர் ரெமி அபோடெரின் தெரிவித்ததாவது, “அவரிடம் நிறைய பேர் பணம் கேட்பதாகவும், உடனடி வாய்ப்பு என அவர் ஒரு போட்டியில் பங்கேற்றதும் தவறான முடிவாகி விட்டது” என வருத்தம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பயிற்சியாளர் பாபாடுண்டே ஓஜோ, “இப்படி திடீரென போட்டியில் பங்கேற்பது மிகவும் ஆபத்தானது. குறைந்தது ஒரு மாதம் பயற்சி தேவைப்படும்” என கூறியிருந்தார். ஒலன்ரெவாஜு “ரிங் வாரியராக” புகழப்பட்டவர். அவரது மரணம் திரையுலகத்தையும், ரசிகர்களையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.