நாடு முழுவதும் தங்கத்தின் விலையானது ஒவ்வொரு நாளும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் சாமானிய மக்கள் கலவையில் உள்ளார்கள். அவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி தங்கத்தின் விலை 68,080 க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை அடுத்து இன்று தங்கத்தின் விலை ஆனது 400 ரூபாய் ஒரு சவரனுக்கு உயர்ந்து ஒரு சவரன் 68,480 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையை அமெரிக்காவை சேர்ந்த பங்குச்சந்தை நிபுணர் ஜான் மில்ஸ் இதுகுறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,”நாட்டில் தங்கத்தின் விலை தற்போது விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலையில் 38% அதாவது கிராம் ஒன்றுக்கு 3000 ரூபாய் வரை குறையும் என்று கூறியுள்ளார். மேலும் உலக அளவில் தங்கத்தின் உற்பத்தி உயர்வு மற்றும் தேவை குறைவு ஆகிய காரணத்தால் இனிவரும் காலங்களில் தங்கத்தின் விலை குறையும் என்றும் கூறியுள்ளா.ர் இதனால் சாமானிய மக்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.