நித்தியானந்தா கைலாசாவில் வசித்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன் சுந்தரேஸ்வரன் வீடியோ மூலம் தெரிவித்திருந்தார். அந்த வீடியோவில் இந்து தர்மத்தை காப்பதற்காக நித்தியானந்தா உயிர் தியாகம் செய்ததாக தெரிவித்திருந்தார்.இதனையடுத்து, நித்தியானந்தாவின் பல்லாயிரம் கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி நடைபெறுகிறதா? என பக்தர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. கைலாசாவில் வசித்துவரும் நித்தியானந்தா, உயிரிழந்து விட்டதாக செய்திகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், கைலாசா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
அதன்படி, நித்தியானந்தா கைலாசாவின் எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்ட என்ட்ரி கொடுத்துள்ளார் . அந்த வீடியோவில் நான் வீழ்வேன் என நினைத்தாயோ? என்று தலைப்பிட்டு, “குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் உயிரோடு இருப்பேன். இந்து எதிரிகள், வெறுப்பாளர்கள் என்னுடைய நேரத்தை வீணடித்து வருகின்றனர். “மகனுங்களா.. நான் 126 வயதில்தான் பேக் பண்ணிட்டு போலாம்னு இருந்தேன். இப்படியே பண்ணா என் வாழ்நாளை 1,000 வருஷமாக்கிடுவேன் பாத்துக்கோங்க”என பேசியுள்ளார்.
மற்றொரு வீடியோவில், நான் உயிரோடுதான் இருக்கேனா, இல்லையா? ஒரு முடிவுக்கு வாங்கப்பா, என் சந்தேகத்தை தீர்த்து வையுங்க. நான் இறந்துவிட்டதாக சிலர் வீடியோ வெளியிட்டுள்ளனர். 3 மாதங்களில் 4,000 வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். அதை நான் எப்போது பார்த்து முடிப்பது? இப்போது எனக்கே சந்தேகமா தான் இருக்கு உயிரோடு இருக்கேனா இல்லையா என்று… எதாவது ஒரு முடிவுக்கு வாங்க” என குறிப்பிட்டுள்ளார். நித்யானந்தா இறந்துவிட்டதாக வதந்திகள் பரவிய நிலையில், ஏப்ரல் 2ம் தேதி இரவு 7 மணிக்கு பகவான் நித்யானந்த பரமசிவம் நேரலையில் தோன்றுவார் என அறிவிக்கப்படுள்ளது.