ஆன்லைனில் ஆர்டர் பண்ணுங்க…! 2 ரூம் வசதியுடன் வீடு உங்களை தேடி வரும்…. வேண்டாம்னா திரும்ப கொடுத்திடலாம்…. சீனாவின் அசத்தலான திட்டம்….!!
SeithiSolai Tamil April 03, 2025 01:48 AM

தொலைபேசியில் சில பொத்தான்களை அழுத்துவதன் மூலம் நாமே விரும்பும் பொருட்களை வீட்டிலிருந்தே ஆர்டர் செய்து வாங்கும் காலத்தில், தற்போது வீட்டையும் ஆன்லைனில் வாங்கும் நிலை உருவாகியுள்ளது.

சீன நிறுவனமான அலிபாபாவின் ஒரு பகுதியாக செயல்படும் அலி-எக்ஸ்பிரஸ் எனும் உலகளாவிய ஆன்லைன் ரீடெயில் மார்க்கெட்பிளேஸில் தற்போது 2 அறைகள் மற்றும் ஒரு லிவிங் ஸ்பேஸ் கொண்ட ஒரு சிறிய வீடு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த வீடு சிறிய குடும்பங்களுக்கு மிகவும் ஏற்றதாக இருப்பதுடன், அதன் விலை ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் குறைவாக உள்ளதால் மக்கள் ஆர்வமுடன் ஆர்டர் செய்ய தயாராக உள்ளனர்.

இந்த வீடு 20 அடி அகலத்திலும் 2.4 மீட்டர் உயரத்திலும் கட்டப்பட்டிருக்கிறது. இந்த வீட்டை சீனாவிலிருந்து இலவச ஷிப்பிங் மூலம் ஆர்டர் செய்யலாம், சுமார் 2 மாதங்களில் கடல் வழியாக உங்கள் வீட்டு வாசலுக்கே கொண்டு வந்து விடப்படுகின்றது.

மேலும், இந்த வீடு வெள்ளை, கருப்பு மற்றும் பழுப்பு நிறங்களில் கிடைக்கும் என்பதால், நீங்கள் விரும்பும் தோற்றத்தைக் குறிப்பிட்டு தேர்வு செய்யலாம். வீடுகள் வெவ்வேறு அளவுகளிலும் (30 அடி, 40 அடி) கிடைக்கின்றன.

இந்த 20 அடி வீடு வெறும் ரூ.5.9 லட்சத்தில் கிடைக்கின்றது. அதே சமயம், 30 அடி வீடு ரூ.8.7 லட்சம் மற்றும் 40 அடி வீடு ரூ.9.8 லட்சம் என விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வீடுகளை நீங்கள் ஓர் ஹோட்டல் போல வாடகைக்கு விடக்கூடியதுடன், உங்கள் வீட்டில் விருந்தினர்களுக்கான தனி வசதியாகவும் பயன்படுத்தலாம்.

மேலும், சில காரணங்களால் வீடு பிடிக்கவில்லை என்றால், குறிப்பிட்ட கால எல்லைக்குள் அதை திருப்பிக் கொடுத்து பணத்தை மீட்டுவிடும் வசதியும் இதில் உள்ளது. ஆன்லைனில் வீடு வாங்கும் இந்த புதிய முயற்சி மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.