அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து மாதம் 12 சதவீதம் தொகையானது பிடித்தம் செய்யப்படுகிறது. இது ஊழியர்களுடைய வருங்கால வைப்பு நிதி ஆணையத்தால் மாதம் தோறும் பிடித்தம் செய்யப்பட்டு நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. வருங்கால வைப்பு நிதியிலிருந்து தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான பணத்தை அவசர தேவைக்கு எடுப்பதற்கு நடைமுறையை எளிமைப்படுத்தும் விதமாக யுபிஐ வசதியை அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து செய்தி நிறுவனத்துக்கு மத்திய தொழிலாளர் நலத்துறை செயலாளர் சுமிதா தவ்ரா விளக்கம் அளித்துள்ளார். அதாவது, வரும் மே மாத இறுதிக்குள் அல்லது ஜூன் மாத இறுதிக்குள் பிஎப் தொழிலாளர்கள் தங்களுடைய பிஎஃப் தொகையிலிருந்து ஒரு லட்சத்திற்கும் குறைவான தொகை எடுக்கும் வசதி அல்லது ஏடிஎம் வசதி மூலமாக எடுக்கும் சேவை அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். பிரத்யேக அட்டையை பயன்படுத்தி ஏடிஎம் மூலமாக எடுத்துக் கொள்ள முடியும் என தெரிவிதித்துள்ளார். மேலும் யுபிஐ மூலமாக தங்களுடைய பிஎப் கணக்கில் எவ்வளவுஇருப்பு இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். அவசர தேவைக்கு பணம் எடுப்பதில் PF தொழிலாளர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தார்கள். தற்போது தேவையான தொகையை எளிதாக பெற முடியும் என்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.