தெலங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டத்தில் பிறந்தநாளில் இளைஞரை கொடூரமாகக் கொலை செய்த காதலியின் தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டத்தில் முப்பிரிடோட்டா கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணைக் அதே கிராமத்தை சேர்ந்த சாய்குமார் என்பவரை காதலித்தார். அந்த இளம் பெண்ணின் தந்தை வேறு சமூகத்தை சேர்ந்த சாய்குமாரை, தனது மகள் காதலிப்பதால் பலமுறை எச்சரித்தார். ஆனால் அவர்கள் நிலையை மாற்றி கொள்ளவில்லை. இதனால் சாய்குமாரை கொலை செய்ய திட்டமிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று சாய்குமாருக்கு பிறந்தநாள், அதனையொட்டி நண்பர்களுடன் கொண்டாட தயாராக இருந்தபோது, மறைந்திருந்த சிறுமியின் தந்தை, கோடரியால் தாக்கினார். இதில் படுகாயமடைந்த சாய்குமாரை அவரது நண்பர்களும், உறவினர்களும் சுல்தானாபாத் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சாய்குமார் இன்று உயிரிழந்தார்.
காதலித்த பாவத்திற்காக தங்கள் மகன் கொல்லப்பட்டதாக குடும்பத்தினர் கவலை தெரிவித்தனர். சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிட்ட பெத்தப்பள்ளி ஏசிபி கிருஷ்ணா விசாரணை நடத்தி கிராமத்தில் மோதல்களைத் தடுக்க காவல்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். மறுபுறம், வியாழக்கிழமை, கரீம்நகரில் ஷாப்பிங் செய்துவிட்டுத் வீடு திரும்பும்போது, சாய்குமாரின் கார் விபத்துக்குள்ளானது. அந்த நேரத்தில் காரில் உள்ள பலூன்கள் திறந்ததால் அவர் ஆபத்திலிருந்து தப்பினார். சில மணி நேரங்களுக்குள் அவர் காதலித்த இளம் பெண்ணின் தந்தையால் கொலை செய்யப்பட்டதை நண்பர்களால் ஜீரணிக்க முடியவில்லை என்றும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோருகின்றனர்.