தெலுங்கானா மாநிலத்தில் நரசிம் ஹூலு ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தக்காளியை அதிக அளவில் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது அறுவடை செய்யும் தக்காளிகளை விவசாயிகள் விற்பனைக்காக சந்தைக்கு எடுத்து செல்கின்றனர். ஆனால் தக்காளிக்கு போதுமான விலை கிடைக்காததால் விவசாயிகள் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் மஹபூப் நகர் உழவர் சந்தைக்கு விவசாயி ஒருவர் தக்காளிகளை விற்பனைக்காக கொண்டு சென்றார். ஆனால் அங்கு 30 கிலோ தக்காளியை 100 ரூபாய்க்கு கூட அவரால் விற்க முடியவில்லை. இதனால் அவர் தான் கொண்டு வந்த தக்காளி பழங்களை சாலையோரம் கொட்டி விட்டு சென்றார். அவர் கொட்டிய தக்காளிகளை அந்த வழியாக வந்த கால்நடைகள் சாப்பிட்டது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறும்போது கடந்த வருடம் ஒரு கிலோ தக்காளி ₹200 வரைக்கும் விற்பனையானது.
இதனால் விவசாயிகளும் லாபம் ஈட்டினர். அதனை கருத்தில் கொண்டு இந்த வருடமும் தக்காளியை அதிக அளவில் பயிரிட்டோம். ஆனால் அதற்கு போதிய அளவு விலை கிடைக்கவில்லை. இதைப்போன்றே ஆந்திராவிலும் தற்காலியின் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் பலரும் அறுவடை கூட செய்யவில்லை என்று கூறியுள்ளார். மேலும் தக்காளிக்கு போதிய விலை இல்லாததால் விவசாயி சாலையோரம் கொட்டி சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.